Thu. Dec 8th, 2022
tnpsc group 4 books

TNPSC தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்காக Group 4 தேர்விற்கான அணைத்து புத்தகங்களும் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

=>. இடியோசை கேட்ட நாகம்போல உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்?
                1.மகிழ்ச்சி
                2.அச்சம்
                3.சிறப்பு
                4.இறப்பு
Answer:
அச்சம்

=>. அனலில் விழுந்த புழுபோல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்?
                1.துன்பம்
                2.ஆறாத்துயரம்
                3.மகிழ்ச்சி
                4.சிறுமை
Answer:
ஆறாத்துயரம்

=>. தாமரை இலைத் தண்ணீர் போல உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்?
                1.பற்று
                2.சிறப்பு
                3.மேன்மை
                4.பற்று அற்று இருத்தல்
Answer:
பற்று அற்று இருத்தல்

=>. அச்சில் வார்த்தாற் போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்?
                1.பொய்யானது
                2.உண்மைத்தன்மை
                3.கடுமையானது
                4.வலிமையற்றது
Answer:
உண்மைத்தன்மை

=>. நின்றனன் அவ்வழி நிகழ்ந்த தென்னெனில் – துன்று பூஞ்சோலையை அரக்கன் – சீர்மோனையைச்சுட்டுக?
                1.நின்றனன் – அவ்வழி
                2.நிகழ்ந்த – தென்னெனில்
                3.நீரதன் – நிகழ்ந்த
                4.நிகழ்ந்த – சோலைவாய்
Answer:
நீரதன் – நிகழ்ந்த

=>. பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவகற் றாதீர்! சீர்மோனையைச் சுட்டுக?
                1.பாரத பூமி – பழம்பெரும்
                2.பழம்பெரும் – பாரத பூமி
                3.நீரதன் – புதல்வர்
                4.புதல்வர் – நினைவகற்
Answer:
பாரத பூமி – பழம்பெரும்

=>. பனித்த சடையும் பவளம் போல் மேனியிற்பால் வெண்ணீறும் – அடி எதுகையைச்சுட்டுக?
                1.பனித்த – மேனியிற்பால்
                2.பனித்த – பவளம்
                3.சடையும் – பவளம்
                4.பனித்த – சடையும்
Answer:
பனித்த – மேனியிற்பால்

=>. பொன்புனை மன்று ளாடும் பொற்கழல் – மோனையைத் தேர்க?
                1.பொன்புனை – ளாளும்
                2.பொன்புனை – பொற்கழல்
                3.மன்று – ளாடும்
                4.மன்று – பொற்கழல்
Answer:
பொன்புனை – பொற்கழல்

=>. துப்பார்க்குத் துப்பாய துப்பார்க்குத் – இயைபினைக் கண்டறிக?
                1.துப்பார்க்குத் – துப்பாய
                2.துப்பார்க்குத் – துப்பார்க்குத்
                3.துப்பார்க்குத் – துப்பாக்கி
                4.துப்பாய – துப்பார்க்கு
Answer:
துப்பார்க்குத் – துப்பார்க்குத்

=>. பிரித்து எழுதுக: கொங்கலர்தார்=
                1.கொங்கலர் + தார்
                2.கொ + கலர்தார்
                3.கொங்கு + அலர் +தார்
                4.கொங்க + அலர்தார்
Answer:
கொங்கு + அலர் +தார்

=>. ‘உழவர் நிலத்தை உழுது விதை விதைத்து, நீர் பாய்ச்சி, உரமிட்டு அறுவடை செய்தார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக?
                1.தொடர் வாக்கியம்
                2.கலவை வாக்கியம்
                3.தனி வாக்கியம்
                4.செய்தி வாக்கியம்
Answer:
தொடர் வாக்கியம்

=>. ‘நான் இலக்கணம் படித்தேன்’ – எவ்வகை வாக்கியம் என கூறுக?
                1.தொடர் வாக்கியம்
                2.கலவை வாக்கியம்
                3.எதிர்மறை வாக்கியம்
                4.செய்தி வாக்கியம்
Answer:
செய்தி வாக்கியம்

=>. ‘பாரதிக்கு பாரதநாட்டின் மேல் மிகுந்த பற்று’ – எவ்வகை வாக்கியம் என கூறுக?
                1.செய்தி வாக்கியம்
                2.கலவை வாக்கியம்
                3.உணர்ச்சி வாக்கியம்
                4.வினா வாக்கியம்
Answer:
செய்தி வாக்கியம்

=>. ‘பாண்டியர்கள் முத்தமிழ் வளர்த்தனர்’ – எவ்வகை வாக்கியம் என கூறுக?
                1.செயப்பாட்டு வினை வாக்கியம்
                2.செய்வினை வாக்கியம்
                3.உணர்ச்சி வாக்கியம்
                4.தனி வாக்கியம்
Answer:
தனி வாக்கியம்

By